Monday, September 24, 2018

அன்னை மணியம்மையாரின் புகைப்படங்கள்

அன்னை மணியம்மையாரின் புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் புகைப்படங்கள்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

தந்தை பெரியாரின் புகைப்படங்கள்

தந்தை பெரியாரின் புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

தந்தை பெரியாரின் 140-ஆவது பிறந்த நாள் விழா


Sunday, October 27, 2013

முட்டாள், அயோக்கியன்; காட்டுமிராண்டி!


கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று கூறுபவர்களை கடவுள் ஏன் சார் தண்டிப்பதில்லை? அப்படியா னால் அவர் இல்லையா? என்பது கேள்வி இருந்தால் தானே தண்டிப்ப தற்கு என்று ஒரே வரியில் மிகச் சரியாக திருப்பிச் சொல்லி யிருப்போம் நாமாக இருந்தால்!
ஆனால், திருவாளர் சோ, தம் இதழில் அப்படிக் கூறுபவர்கள் பொது மேடையில் அப்படி பேசிய பிறகு அல்லது பத்திரிகைகளுக்கு எழுதிய பிறகு, தனிமையில் கடவுளை நினைத்து ஆண்டவா பிழைப்பிற்காக ஏதோ பேசுகிறோம்.
நாங்கள் உண்மையில் அப்படி நினைக்கவில்லை என்பது உனக்கே தெரியும். எங்களை மன்னித்து விடு என்று கேட்டுக் கொள்கிறார்களோ என்னவோ! அல்லது தங்கள் குடும்பத்தினரைக் கோயில் குளங்களுக்கு அனுப்பி பரிகாரம், பிராயச்சித்தம் எல்லாம் செய்யச் சொல்கிறார்களோ என்னவோ! நாம் என்ன கண்டோம்? என்கிறார் (துக்ளக் 2.10.2013) வேடிக்கை விளை யாட்டாக அல்ல, விஷமத்தனமாக.
நம்மை நோக்கி கேள்விகள் எந்த வடிவில் வந்தாலும் அதனை எதிர் கொள்ள நாம் தயங்கியதில்லை. பதில் சொல்லியும், பகை முடிக்கவும் பகுத் தறிவுப் பகலவன் நம்மை பக்குவப் படுத்தியிருக்கிறார்.
கடவுள் இல்லை என்று பிழைப் புக்காகச் சொல்கிறோமாம். கடவுள் இருக்கிறார். இல்லாத இடமே இல்லை. தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார் என்று சொல்வதெல்லாம் செத்து சுடுகாடு போவதற்காகவா? கடவுள் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தத் தானே? வேறு எதற்கு? ஒரே ஒரு முறை வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உளறிக் கொட்டி விட்டு ஓய்ந்து கிடப்பவர்களல்ல நாம்.
ஓராயிரம் முறை அல்ல. கால மெல்லாம், இறுதி மூச்சு அடங்கும் வரை பேசியும், எழுதியும் வருபவர்கள். யாரிடமும் போய் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கும் கோழைகள் அல்ல. மறுபடியும் மறுபடியும் மன் னித்துக் கொண்டிருக்கும் வேலையை மடையன் கூடச் செய்ய மாட்டான். பரிகாரம், பாவ மன்னிப்பு, பிராயச் சித்தம் என்பதெல்லாம் சுத்த பித்த லாட்டம் என்று ஓங்கிச் சொல்பவன் கடவுள் மறுப்பாளன் மட்டுமே! இதுபோன்ற அர்த்தமற்ற வேலைகளில் பணத்தையும், நேரத்தையும் வீணடிப் பவர்கள் பக்த சிரோன்மணிகளே. அச்சமின்றி  அவர்களால் வாழ முடிகிறதா? கந்து வட்டி கடன், தீராத நோய், வாட்டும் வறுமை, வாழ்க் கையில் நடுக்கம், வற்றாத பிரச் சினைகள், தோல்விகள், ஏமாற்றங்கள் இவற்றில் ஏதேனும் நின்று அண்டாத பக்தனைக் காட்ட முடியுமா? ஆண்டவன் ஒருவன்  இருந்தால், அவன் கருணை உள்ளவனாக இருந்தால் தன்னை நம்பி வாழும் பக்தனுக்கு தீங்குகள் நெருங்குவதை அனுமதிப்பானா?
அருள் வாக்கும், ஆசீர்வாதங் களையும், அள்ளித் தந்து தந்திரங் களால் சாகசங்கள் நிகழ்த்தும் சாமி யார்களும், மடத் தலைவர்களும் யோக்கியர்களா? முற்றும் துறந்த வர்கள் என்று கருதப்படும் இவர் களால் பிரம்மச்சரிய விரதமும், ஒழுக் கமும் முழுமையாகக் கடைப்பிடிக்க முடிகிறதா? இவர்களைப்பற்றி நாள்தோறும் வரும் செய்திகள் அதிர வைக்கின்றனவே களவு, கயமை, பாலியல் வன்முறை இவையெல்லாம் பக்தியின் பெயரால் தானே அரங்கேறு கின்றன. சாமியார்களே போலி என்கிறபோது போலிச்சாமியார் என்ற பிரிவு வேறு; நாடு என்னாவது?
வெறுமனே கடவுள் இல்லை என்று கத்திக் கொண்டு திரிந்தவர் களல்ல நாம். காசு கொடுத்து பிள்ளையார் பொம்மைகளை வாங்கி பலரும்அறிய தெருவில் போட்டு உடைத்தோம். ராமன் படத்தையும் இராமாயணத்தையும் தீயிட்டுக் கொளுத்தினோம். தூணைப் பிளந்து கொண்டு நரசிம்மனும் வர வில்லை, ஒரு நாயும் வரவில்லையே. ஒரு வேளை, மதுரை திருமலை நாயக்கர் மகால் பெருந்தூண்களில் ஒன்றில் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் திண்டாடுகிறானோ என்னவோ!
கடவுளை நம்பினோர் கைவிடப் படார் என்பதும் பொய்யுரை தானே? கொடிய நோயில் சாகிறவர்கள், விஷம் அருந்தியும், விபத்திலும் சாகிறவர்கள் கொலை, தற்கொலை யில் முடிந்து போகிறவர்கள் அத்தனை பேரும் கடவுள் இல்லை என்பவர்களா?
அண்மையில் வடக்கே உத்தரகாண்ட் பெரு வெள்ளத்தில் அடித்துச் சொல்லப்பட்டு காணாமற் போன 4120 பேரும் கடவுளால் தண்டிக்கப்பட்ட நாத்திகர்களா? கடவுள் இல்லவே இல்லை என்று கூறிவிட்டு கடவுளிடம் மன்னிப்பு கோராதவர்களா? புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் என புள்ளி விவரம் கூறுகிறதே அது பொய்யா/ கருணையே வடிவானவன் காப் பாற்றவில்லையே!
இது போன்ற நிகழ்வுகள் எத் தனையோ இருந்தாலும் எடுத்துக் காட்டாக ஒன்றை மட்டும் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கையில் நடந்தது. அவரது துணைவியார் உடல் நலம் இல்லா மல் அவதிப்பட்டுக் கொண்டிருந் தார். ஒரு இரவின் போது எதிர் பாராது உயிருக்குப் போராடும் நிலை. கணவரும் அருகில் இல்லை. மருந் தும் கைவசமில்லை. மருத்துவரை அழைக்கலாம் என்றால் தொலை பேசியும் வேலை செய்யவில்லை. அருகிலும் யாரும் இல்லாத் தனிமை விளைவு மரணம்! செய்தி கால தாமதமாக பால்தாக்கரேக்குப் போகிறது. பதறியடித்து ஓடி வந்தார். சடலத்தைக் கண்டு அழுது புரண்டு விட்டு என்ன சொன்னார் தெரியுமா?
கடவுள் என்று எவருமில்லை. எதுவுமில்லை. அப்படி ஒருவன் இருந்திருந்தால் என் மனைவி அனாதையாகச் செத்துப் போயி ருப்பாளா? அவள் ஒரு கடவுள் பக்தை.ஆபத்துக்கு உதவாத கடவுள் இருந்தால் என்ன இல்லா விட்டால் என்ன? நான் இன்று முதல் நாத்திகன் என்று பகிரங்கமாக அறிவித்தார். அன்று மனைவி பிழைத்திருந்தால் நாத்திகர் என்று தன்னை அறி வித்திருக்க மாட்டார். ஆத்திரத்தில் அவசரப்பட்டு அப்படி அறிவித்தவர் நாத்திகராய் அப்படி அறிவித்தவர் நாத்திகராய் நெடுநாட்கள் நடமாட முடியவில்லை. ஏன் தெரியுமா?
இவரது கட்சியோ சிவசேனா நாத்திகம் பேசினால் தலைவர் பதவியைத் தக்க வைக்க முடியாது. நாத்திக வேடம் அவரைப் பொறுத்த மட்டில் அற்ப ஆயுளில் கலைந்தது. கடவுளுக்காகவே, கடவுள் பெய ராலேயே கட்சி நடத்தும் 24 காரட் ஆன்மீகவாதிகளுக்கு உதவ அந்த சிவன் வரவில்லையே ஏன்? அப்படி ஒருவன் இருந்தால் தானே வருவான்?
மொட்டை போடுவது, தலையில் தேங்காய் உடைப்பதுபோன்ற பரி காரம், பிராயச் சித்தங்களை செய்யத் தவறி விட்டாரோ பால்தாக்கரே? நாம் என்ன கண்டோம்?
அறிவிலிகளுக்கு, அரைவேக்காடு களுக்குத் தலையில் ஆணி அடித்தாற் போல் நம் அறிவு ஆசான் சொன்ன தை மீண்டும் அழுத்தமாக சொல்வோம்.
கடவுள் இல்லை இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!

அலகு குத்துதல் - சிலுவையில் அறைதல் - சுத்தியில் வெட்டிக்கொள்ளல் உண்மை நிலை என்ன?

அலகு குத்துதல், பறவைக்காவடியில் தொங்குதல், தீ மிதித்தல், கற்பூரம் கொளுத்திக் கையில் வைத்தல் மற்றும் வாயில் போடுதல் ஆகிய செயல்கள் கோவில் விழாக்களில் சிலரால் செய்யப்படுவதை நாம் பார்த்திருப்போம். கடவுள் சக்தியாலோ, கடவுள் அருள் மனிதன் உடலில் ஏறுகிறது என்று பக்தர்கள் சொல்வதாலோ செய்ய இயலும் செயல்கள் அல்ல என்பதை விளக்குகிறது இந்த அறிவியல் விளக்கக் கட்டுரை.
 எச்சரிக்கை: இது ஒரு மதத்தைக் குறைகூறும் பதிவல்ல, உலகில் பல பகுதிகளில் இந்தப் பழக்கம் இயற்கைக்கு மாறான மனிதச்செயல் (Taboo) மற்றும், தொழில் முறை வித்தை, வீர விளையாட்டாகவும் காணப்படுகிறது.
உடலின் அனிச்சைச் செயல்கள்: மனிதத் தசை நார்கள், திடீரெனத் தாக்கப்படும்போது அதைத் தவிர்க்க மூளைக்குச் செய்திகளை அனுப்பும். மூளை உடனடியாக வலியை உருவாக்கும் எக்ஸைம்களை அனுப்பி இரத்த ஓட்டத்தைச் சுருக்க ஆரம்பிக்கும். அப்போது பாதிக்கப்படும் தசை நார்களுடன் இணைந்துள்ள அனைத்து செல்களும் ஒரு பாதுகாப்பு எதிர்வினையை உருவாக்கும்.
முதலில் தன்னிச்சையாக அந்தத் தாக்குதலைத் தவிர்க்க உடல் முயற்சிக்கும் தற்காப்பு நடவடிக்கை (Defence Activity).. பிறகு அதை உடலில் ஏற்படும் திடீர்க் காயங்கள் மற்றும் மேலும் காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்.
எ.கா: யாராவது நம்மைக் கூர்மையான ஆயுதங்களால் தாக்க வருவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இது திடீர்த் தாக்குதலில் மட்டும்தான். ஆனால், அலகு குத்துபவர்கள், வித்தைக்காரர்கள், டாபோக்கள் இதை ஒரு தேவைப்பட்ட ஒன்றாக எடுத்துக் கொள்கின்றனர். இந்தச் செய்தி மூளைக்கு அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதனை அடுத்து, மூளை இது தேவையான ஒன்றுதான் என்று உணர்ந்து ஆபத்தான சமயங்களில் செய்யும் அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளையும் நிறுத்திவிடுகிறது.
விளைவு, தசை நார்கள் பெரிய ஸ்க்ரூ ட்ரைவரைக் கொண்டு மெல்ல மெல்ல (முக்கியமான உள்ளுறுப்புகள் இல்லாத பகுதியில்) ஊடுருவ இடைவெளி தருகிறது. அங்குள்ள இரத்த நாளங்கள் கிழிபடும்போது ஏற்படும் வலியைத் தவிர வேறு ஒன்றும் உணரமாட்டோம்.
மற்றொரு விசித்திர செய்தி, நாம் அனைவரும் இதன் அனுபவத்தை உணர்ந்திருக்கிறோம். ஆம், செவிலியர், இரத்தப் பரிசோதகர், பல் மருத்துவர் மற்றும் அறுவைச் சிகிச்சை மருத்துவர் நமது உடலில் ஊசியால் குத்தும்போது ஏற்படும் அதே உணர்வுதான் அலகு குத்தும்போது ஏற்படுவது.
பறவைக்காவடி: நமது தசை நார்கள் ஒரு லாரியை இழுக்கும் அளவு வலுவானவைகள். முதுகில் கொக்கிகளைக் குத்தி அதில் ஒரு லாரியை இணைக்கும் கயிற்றைக்கட்டி இழுக்கச் சொன்னால், வலிமையுள்ளவர்கள் எளிதாக இழுத்துவிடுவார்கள். அப்படி இருக்கும்போது நமது உடல் எடை என்பது பெரிய பிரச்சினையே அல்ல. அதாவது, ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல, உங்களுக்கு விருப்பப்படும்போது அல்லது இயற்கை உபாதைகளுக்கு மட்டும் இறங்கி வந்தால் போதும். மற்றபடி நீங்கள் தொங்கிக்கொண்டே இருக்கலாம். ஈர்ப்பு விசையால் பாதிப்பு என்பது எடை தாங்காத அளவிற்கு எடை கூடும்போது தசைகள் கிழிபடும்.
தீ மிதித்தல்: இது மிகவும் எளிமையான ஒரு மெக்கானிசம். கிராமத்தில் அடுப்பு எரிக்கும்போது சில நேரங்களில் கனன்று கொண்டு இருக்கும் கட்டையில் இருந்து கனல் வெளியில் விழுந்ததும், அதனைக் கையில் எடுத்து எரிந்து கொண்டிருக்கும் நெருப்பினுள் போடுவதைப் பார்த்திருப்போம்.
இதே மெக்கானிசம்தான் தீ மிதிக்கும்போதும் ஏற்படுகிறது. நமது பாதங்கள் எண்ணிடலங்கா மெல்லிய இரத்த நாளம் மற்றும் கரோட்டின் செல்களால் ஆனது. இந்த கரோட்டின் செல்களை நுண்ணோக்கியால் பார்த்தோமென்றால் கண்ணாடிப் பொருட்களைப் பாதுகாக்கும் காற்றுக்குமிழ் அடங்கிய பிளாஸ்டிக் சீட் போன்று இருக்கும்.
அங்கு காற்றுக்குமிழ், இங்கு இரத்தம். இதுதான் வித்தியாசம். கரோட்டினுள் அதிக அழுத்தத்தில் பாயும் இரத்தம் குறிப்பிட்ட அளவு வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து நமது பாதங்களை உள்ளங்கைகளைக் காப்பாற்றுகிறது.
இது குறிப்பிட்ட அளவு மட்டும்தான் தணலைக் கட்டுப்படுத்தும். அதே நேரத்தில் உலோகம், மணல், கல் போன்றவைகளில் இந்தத் தீமிதி வேலை செய்தல் கூடாது. காரணம், இவை தணலைப்போல் எளிதில் வெப்பத்தைக் குறைத்து கூட்டும் தன்மையுடையவை அல்ல.
கடவுள் சக்தி, நம்பிக்கை போன்றவைகள் இங்கு ஒரு ஏமாற்று வேலையாகத்தான் நடக்கிறதே தவிர வேறு ஒன்றுமில்லை.
பள்ளிப் பருவத்தில் ப்ளேடால் கையைக் கிழித்து பெண் நண்பரின் பெயர் எழுதுவது, மெழுகுவர்த்தியில் கம்பியைச் சுடவைத்து பெயர் எழுதுவது, காது மூக்கு குத்துவது, பச்சை குத்துவது போன்றவையும் இதே வகைதான்.
வடக்கில் உள்ள சாமி சாமியாரினிகள் செய்யும் முள்படுக்கை, ஆண்குறியில் செங்கற்களைக் கட்டித் தூக்குவது, மார்பகங்களில் கூரான உலோகங்களைக் கட்டி கடவுளர்களின் சிலைகளைத் தொங்கவிட்டு வருவதும் இதே முறையில்தான்.
இது உலகில் உள்ள அனைத்து மதங்களிலும் உள்ளது. கிறித்துவர்கள் சிலுவையில் அறைந்து கொள்வது, இஸ்லாமியரில் ஒரு பிரிவினர், கத்தியால் தங்கள் உடலில் கிழித்துக் கொள்வது போன்றவையும் இந்த வரைமுறையில் அடங்கும்.
நன்றி: - சரவணா இராஜேந்திரன்
அலகு குத்துதல் - சிலுவையில் அறைதல் - சுத்தியில் வெட்டிக்கொள்ளல் உண்மை நிலை என்ன?